March 2, 2026
பழனியில் திருடுபோன இருசக்கர வாகனம் சில மணி நேரத்தில் கண்டுபிடிப்பு.

பழனியில் திருடுபோன இருசக்கர வாகனம் சில மணி நேரத்தில் கண்டுபிடிப்பு.

பழனி காவல் துறையினருக்கு குவியும் பாராட்டு.

பழனி அருகே உள்ள கரிகாரன் புதூர் பகுதியை சேர்ந்த அய்யர்பாண்டி என்ற நபர் பழனி போஸ்ட் ஆபீஸ் அருகே இயங்கி வரும் குரூப்-1 தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகிறார்.

நேற்று மதியம் ஏடிஎம் சென்று பணம் ரூபாய் 10 ஆயிரம் ரூபாய் எடுத்து நமது இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு வகுப்புக்கு சென்ற பொழுது அவ்வழியாக சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் வாகனத்தை தள்ளி சென்றுள்ளார்.

உடனடியாக பதறி போன அவர் பழனி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரைத் தொடர்ந்து பழநி டிஎஸ்பி தனஜெயன் தலைமையில், நகர் காவல் ஆய்வாளர் மணிமாறன் மேற்பார்வையில், சார்பு ஆய்வாளர் விஜய் , அக்னிவீரபத்திரன், மற்றும் கண்ணன் ஆகியோர் சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து, இரண்டு மணி நேரத்தில் வாகனத்தை எடுத்துச் சென்ற நபரை கண்டறிந்து, வாகனத்தை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *