
சமயநல்லூர் அருகே வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற 4ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு போலீசார் விசாரணை.
சோழவந்தான்.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மலைமேகம் பாப்பாத்தி பந்தல் வேலை பார்ப்பவர் இவரது மகன் கருப்பு சமயநல்லூர் அருகே ஊர்மெச்சிகுளம் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார் . இந்லையில் இன்று பள்ளிக்கு செல்லாமல் இவரது வீட்டிற்கு வந்த நிலக்கோட்டை சேர்ந்த இவருடைய தாய்மாமன் முருகன் என்பவருடன் சமயநல்லூர் வைகை நகர் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் இறங்கி குளிக்க சென்றுள்ளார் அப்போது அதிகளவு தண்ணீர் வந்ததால் எதிர்பாராத விதமாக தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார் உடனடியாக தாய்மாமன் முருகன் அவரின் தாய் தந்தைக்கு தகவல் கூறியுள்ளார் அவர்கள் மூலம் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த சமயநல்லூர் காவல்துறையினர் மற்றும் சோழவந்தான் தீயணைப்புத்துறையினர் இரண்டு மணி நேர தேடுதலுக்கு பிறகு சமயநல்லூர் அருகே அதிசயம் பின்புறம் உள்ள ஆற்றில் சிறுவன் கருப்புவை பிணமாக மீட்டனர் மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் குளிக்கச் சென்ற நாலாம் வகுப்பு மாணவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.