August 6, 2025
குடியிருப்போர் நலச் சங்க புதிய கட்டிடம் திறப்பு: எம்.எல்.ஏ. !

குடியிருப்போர் நலச் சங்க புதிய கட்டிடம் திறப்பு: எம்.எல்.ஏ. !

மதுரை:

மதுரை, திருப்பரங்குன்றம் அவனியாபுரம் பகுதியில் பெரியசாமி நகர் குடியிருப்போர் நலசங்க புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. புதிய குடிருப்போர் நல சங்க கட்டிடத்தை திறந்து வைத்தார்.
அவனியாபுரம் பெரியசாமி நகர், திருப்பதி நகர் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் ஒன்றிணைந்து பெரியசாமி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் அமைத்து செயல்பட்டு வருகின்றனர்.

தங்களது குடியிருப்பு நல சங்கத்திற்கு சொந்த கட்டிட திறப்பு விழாவிற்கு, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் வே.வே.ராஜன் செல்லப்பா தலைமை ஏற்று திறந்து வைத்தார்.

பெரியசாமி நகர் திருப்பதி நகரில் குடியிருந்து வரும் பகுதியில் சுமார் ஆயித்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.

இதில், தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை வசதி, சாக்கடை, குடிநீர் வசதி போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு சங்கத்தின் மூலமாக தீர்மானத்தை, மதுரை மாநகராட்சி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை பெற்றனர்.

இதில், பேசிய சட்டமன்ற உறுப்பினர் வி. ராஜன் செல்லப்பா, ஒவ்வொரு பகுதியிலும் இதுபோன்ற சங்க கட்டிடங்களை நல்ல முறையில் பராமரித்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது மிகவும் கடினமான காரியம் ஒரு கட்சியை கூட வளர்த்து விடலாம் ஆனால் சங்க கட்டிடம் வளர்ப்பது மிகச் சிரமம் என்று கூறினார் .
எனவே, மக்களின் தேவை என்னவென்று கூறினால் அது சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

புதிய குடியிருப்போர் நல சங்க விழாவிற்கு மன்ற உறுப்பினர்கள் கருப்பசாமி அய்யனார் மற்றும் இன்குலாப் மற்றும் காவல் உதவியாளர் முருகேசன் ஆய்வாளர்கள் லிங்கபாண்டியன் தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய குடியிருப்பு நல சங்க கட்டிடத் திறப்பு விழாவிற்கு, கெளரவத் தலைவர் குருசாமி, தலைமை வகித்தார் . தலைவர் பன்னீர் செல்வம் , து.தலைவர் வேல் முருகன் முன்னிலை வசித்தனர். செல்வராஜ், யோகேஸ்வரன் வரவேற்புரையும்
சங்க செயலாளர் அழகுராஜ் நன்றியுரை கூறினர்.

மற்றும் சங்க நிர்வாகிகள் குடியிருப்பு வாசிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *