
அய்யங்கோட்டை பகுதியில் நலத்திட்ட உதவிகளை .வெங்கடேசன் எம்எல்ஏ வழங்கினார் :
சோழவந்தான், ஆகஸ்ட்: 2.
சோழவந்தான் தொகுதிகுட்பட்ட அலங்காநல்லூர் ஒன்றியம், அய்யங்கோட்டை ஊராட்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பொதுமக்களுக்கு டிபன்பாக்ஸ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வெங்கடேசன் எம். எல். ஏ .வழங்கினார்.
ஒன்றியச்செயலாளர்கள் தன்ராஜ், சரந்தாங்கி முத்தையன், பரந்தாமன் அருண்குமார் நிர்வாகிகள் பிரதீப் சதீஷ் அய்யங்கோட்டை விஜி, மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், அய்யங்கோட்டை கிளை கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, வடுகபட்டி, தனிச்சியம் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.