
துணை முதல்வர் விளையாட்டு துறை அமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள்.
தமிழனின் வீரக்கலை கராத்தே விளையாட்டை மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்றுவிக்க அனுமதியும், கோடி கணக்கான ரூபாயும் வழங்கிய தமிழக முதல்வர் அவர்களுக்கும்,துணை முதல்வர் விளையாட்டு துறை அமைச்சர் அவர்களுக்கும் கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் பாதுகாப்பு நலசங்கத்தின் தலைவர் தனசேகரன் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்
மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை கராத்தே விளையாட்டை பெண் பயிற்சியாளர்கள் பயிற்சி அளிக்க அனுமதி வழங்க வேண்டும், பெண் பயிற்சியாளர்கள் இல்லாத மாவட்டங்களில் கராத்தே விளையாட்டில் தன்னுடைய வாழ் நாட்களை அர்ப்பணித்த,இந்திய நாட்டிற்காக விளையாடிய பயிற்சியாளர்களை பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்றுவிக்க அனுமதி வழங்க வேண்டும்
தமிழகத்தில் கராத்தே விளையாட்டுக்கு அங்கீகாரம் இருப்பதாக பொய் சொல்லி பல ஆண்டுகளாக கராத்தே வீரர்களை ஏமாற்றி கோடி கணக்கில் ஊழல்கள் செய்து வருகின்ற தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டோ அசோசியேஷன் என்ற சங்கத்திற்கு ( TSKA ) தயவு கூர்ந்து பெண்களுக்கு தற்காப்பு கலை கராத்தே விளையாட்டை பயிற்றுவிக்க அனுமதி வழங்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
தமிழகத்தில் கராத்தே விளையாட்டில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்ற கராத்தே பயிற்சியாளர்கள் அனைவரும் TSKA என்ற கராத்தே சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார்கள் என்பதை தமிழக முதல்வர் அவர்களுக்கும், துணை முதல்வர் விளையாட்டு துறை அமைச்சர் அவர்களின் மேலான கவனத்திற்கும் தெரிவித்துக் கொள்கின்றேன் கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் பாதுகாப்பு நலசங்கத்தின் நிறுவனர்
தனசேகரன் 900 321 57 19






