
தமிழகமும் கிருத்துவமும்
தமிழக அரசியலில் நீண்ட ஆண்டுகளாகவே கிருத்துவ மிஷனரிகள் மறைமுகமாக அரசியல் வியூகம் (political strategy) செய்து வருகிறது என்பதை நாம் நன்றாக சிந்தித்து பார்த்தால் நமக்கு தெரிய வரும் பெருந்தலைவர் காமராஜரை தோற்கடித்து தமிழகத்தில் தேசிய சிந்தனையை அந்த உணர்வை வீழ்த்தி பிரிவினையின் விஷ செடிகளை திராவிட அரசியல் மூலம் தூவி விட்டது கிருத்துவ மிஷனரிகள்
பெருந்தலைவர் காமராஜர் தோற்ற பிறகு தமிழகத்தில் ஏன் தேசிய கட்சிகளால் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது இ. காங்கிரஸ் கட்சியால் ஏன் ஆட்சிக்கு மீண்டும் வர முடியாமல் போனது என்றால் அந்த கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்குளே அடங்கி போனது அதற்கு காரணம் கிருத்துவ மிஷனரிகள் மறைமுகமான அரசியல் உள்ளது
தற்போது தமிழகத்தில் பாஜக கட்சி மட்டுமே தேசிய சிந்தனை தேசிய உணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழர்களின் இந்துக்களின் கலாச்சாரம் பண்பாடு பாரம்பரியத்தை கடைப்பிடித்து தமிழகத்தில் மக்களுக்கான அரசியல் செய்து வருகிறது தமிழகத்தில் மீண்டும் தேசிய சிந்தனை தேசிய ஒருமைப்பாடு வளர்ந்து விடக்கூடாது அப்படி பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் இங்கே பிரிவினையை துண்ட முடியாது மத பிரச்சாரம் செய்ய முடியாது அதன் மூலம் கட்டாயம் மதமாற்றம் நடக்காது மேலும் இத்தனை காலம் மறைமுகமாக செயலாற்றி வந்த கிருத்துவ மிஷனரிகள் பணிகள் அனைத்தும் வீணாகும் என்பதாலேயே தற்போது கிருத்துவ மிஷனரிகள் நேரடியாகவே அரசியல் பணிகள் (political Satragey) தமிழகத்தில் நடத்தி காட்டி வருகிறது
இருப்பினும் தமிழகத்தில் கிருத்துவ மிஷனரிகளின் அரசியல் (political Satragey) பலமுறை தோல்வியும் கண்டுள்ளது திமுக பாஜக கூட்டணி பிறகு அதிமுக பாஜக கூட்டணி அதிமுக ஆட்சியில் தான் கட்டாய மதமாற்றம் தடைச்சட்டம் பிறகு அந்த சட்டம் வாபஸ் பெற்றது இப்படி பலமுறை கிருத்துவ மிஷனரிகள் எடுத்து வைக்கும் அரசியல் வெற்றி பெறாமல் தோல்வியில் முடிந்துள்ளது
தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் பாஜக வளர்ந்து விடக் கூடாது என்று கிருத்துவ மிஷனரிகள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அரசியலை முன்னெடுத்து வைக்கும் தொடக்கத்தில் சீமான் கடவுள் மறுப்பு கொள்கை அரசியலை எடுத்து வந்த நிலையில் கிருத்துவ மிஷனரிகள் அவரை கையில் எடுத்துக் கொண்டு தமிழ் தேசியம் என்ற போர்வையில் தமிழகத்தில் இன்றளவும் மறைமுகமாக அரசியல் செய்து வருகிறது என்று தோன்றுகிறது
அதிமுக கட்சியிலும் ஆட்சியிலும் பெயரில் மட்டுமே திராவிடம் இருக்கும் கட்சியில் உள்ளவர்கள் ஆன்மீக ஈடு பாட்டிலும் ஆட்சியில் ஆன்மீகம் சித்தாந்தமும் இருக்கும் அதிமுகவை எதிர்த்து அம்மையார் ஜெயலலிதா அவர்களை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என்று கிருத்துவ மிஷனரிகளால் இறக்குமதி செய்யப்பட்டவர் தான் சீமான் என்று தோன்றுகிறது
தமிழகத்தில் முதல் முதலில் இந்து மக்கள் கட்சி- தமிழகம் இந்துக்களின் முதல்வர் தமிழத்திரு அர்ஜூன் சம்பத் அவர்கள் தான் சீமான் கிருத்துவர் என்று அடையாளம் காட்டியது
சீமான் அவர்கள் அதிமுக ஆட்சி காலத்தில் தான் தமிழ் தேசிய அரசியல் கையில் பிடித்துக்கொண்டு பல போராட்டங்கள் தொடங்கினார் ஜெயலலிதா அம்மையார் தான் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகாரில் சீமானை அடக்கி ஒடுக்கி வைத்தார்
தற்போது தமிழக அரசியலில் ஆளுமையான அரசியல் கட்சி தலைவர்கள் இல்லை என்பதை நன்கு புரிந்து கொண்டு இதுவரை தமிழகத்தில் மறைமுகமாக செயலாற்றி வந்த கிருத்துவ மிஷனரிகள் தற்போது நேரடியாகவே தமிழக அரசியலை முன்னெடுத்து இறங்கி விட்டது என்றே நினைக்க தோன்றுகிறது
திராவிட முன்னேற்றக் கழகத்தின் திராவிட மாடல் அரசு முழுக்க முழுக்க கிருத்துவ மிஷனரிகளால் நேரடியாகவே நடந்து வருகிறது என்று சந்தேகம் எழுந்துள்ளது அதற்கு பல முன்னுதாரணமாக பல நிகழ்வுகள் நடந்துள்ளது
திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற கொஞ்சம் நாட்களில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தினார் சீமான் விவாகரத்தில் நான் அடிப்பது போல் அடிக்கிறேன் நீ அழுவது போல அழு என்பதாக உள்ளது இந்த திராவிட மாடல் அரசு ஆட்சியில் சீமானுக்கு அனைத்து போராட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது சீமான் மீது இதுவரை எந்த வழக்கு மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை அது நடிகை விஜயலட்சுமி புகார் ஆகட்டும் ஈ வெ ரா பற்றிய விமர்சனங்கள் ஆகட்டும் எந்த புகாருக்கும் அவர் மீது நடவடிக்கை இல்லை என்பது நாம் அறிவோம்
ஒவ்வொரு தேர்தலிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது இவர் தனித்து போட்டியிடுவதால் இவருக்கு தனி பெரும்பான்மை இதுவரை கிடைக்கவில்லை ஆனால் குறைந்தபட்ச ஓட்டுக்களை பிரித்து விடுகிறார் இதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை இவர் தனித்து போட்டியிட அதற்கு பணபலம் எப்படி வருகிறது மேலும் சீமான் தனித்து நிற்பதால் அது முழுக்க முழுக்க திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தான் சாதகமான பலன்களைத் தந்துள்ளது
கிருத்துவ மிஷனரிகள் ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு அரசியல் செய்து வருகிறது நடிகர் கமல்ஹாசன் அவர்களை அரசியல் களத்தில் இறக்கியது இப்போது அந்த மநீம கட்சி தனது தாய் கழகமான திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஐக்கியம் ஆனது வருகிற தேர்தல் களத்தில் ஜோசப் விஜய் அவர்களை இறக்குமதி செய்து இருக்கிறது கிருத்துவ மிஷனரிகள்
ஜோசப் விஜயின் தவெக வருகிற சட்டமன்றத் தேர்தலில் தனித்து நிற்கும் போது புதிய வாக்காளர்கள் எந்த பக்கம் வாக்கு செலுத்த வேண்டும் என்று குழப்பம் அடைய வாய்ப்புகள் அதிகம் வாக்குகள் சிதறும் போது திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி சிறுபான்மையினர் வாக்குகளை மொத்தமாக பெறுவதால் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி வெல்ல பெரிய சவாலாக இருக்கும் இது தான் இந்த முறை கிருத்துவ மிஷனரிகள் அரசியல் திட்டம் என்று தோன்றுகிறது
சமீபத்தில் சீமான் தமிழக முதல்வர் அவர்களை சந்தித்த பிறகு சீமானுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்ற செய்தி நாம் அனைவரும் அறிவோம்
தமிழர்கள்/ இந்துக்கள்/ விழித்துக் கொள்ள வேண்டும் தமிழகம் ஆன்மீக பூமி தமிழகத்தில் திராவிடம் இல்லை தேசியம் தான் உள்ளது இது ஒன்றியம் அல்ல பாரதம் இங்கே பிரிவினையை உண்டாக்கும் முயற்சிகளை வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் இந்த கிருஸ்தவ மிஷனரிகளின் சதிகளை புரிந்து கொண்டு தேசியம் மலர மாநில மத்தியில் கூட்டாசி மலர வாக்குகளை மொத்தமாக சிந்தாமல் சிதறாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணி க்கு வாக்குகளை செலுத்தி தமிழகத்தில் மீண்டும் தேசிய அணி ஆட்சி பொறுப்பு ஏற்க வேண்டும்
நன்றி :
நா. ஆனந்த் சங்கி
இந்து மக்கள் கட்சி- தமிழகம்
இந்துக்களின் முதல்வர் தமிழ்த்திரு அர்ஜூன் சம்பத் தலைமை ஏற்போம்.








