
கண்காணிப்பு காமிரா: காவல் ஆணையர் :
மதுரை:
மதுரை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் , வழிகாட்டுதலின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, (24.07.2025) எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்குட்பட்ட விராட்டிபத்து பகுதியில், அகச்சிவப்பு கதிர்கள் மூலம், வாகன எண்களை துல்லியமாக படம் பிடித்து வாகன விபரங்களை எளிய முறையில் அடையாளம் காணும் வகையிலான , அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமரா (Automatic Number Plate Recognition) வசதிகளுடன்,24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவலர்கள் செயல்படக்கூடிய புதுப்பிக்கப்பட்ட காவல் சோதனைச் சாவடியை மாநகர காவல் ஆணையர் லோகநாதன்
திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார்.
காவல் துணை ஆணையர் (தெற்கு ) உடனிருந்தார்.
இந்நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குரு அவர்களுக்கு “APPRECIATION AWARD” என்ற விருதை ஆணையாளர் லோகநாதன் வழங்கினார்.
இதில், காவல் துறையினர் மற்றும் அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.






