
சோழவந்தான் பகுதியில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு அபிஷேகம் நடைபெற்றது.
சோழவந்தான் ஜூலை 21
ஆடி கிருத்திகையை முன்னிட்டு சோழவந்தான் பகுதிகளில் உள்ள முருகன் திருத்தலங்களில்
சிறப்பு வழிபாடு அபிஷேகம் நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் உள்பிரகாரத்தில் வலது புறம் உள்ள முருக பெருமானுக்கு ஆடி கிருத்திகையை முன்னிட்டு பால் தயிர் நெய் வெண்ணெய் சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சர்வ அலங்காரத்தில் முருக பெருமான் காட்சியளித்தார் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் முருகப் பெருமானை தரிசனம் செய்து சென்றனர்.
தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதே போல் தச்சம்பத்து அருகே உள்ள ஆறுமுக கடவுள் திருக்கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருக பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்று.
அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது கிராமப் பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் முருகப்பெருமானை தரிசனம் செய்து சென்றனர்.