
எடப்பாடியார் தலைமையில் மக்களாட்சி ஜனநாயக ஆட்சி மலர வேண்டும் என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
திமுகவுக்கு வாக்களித்தால் யார் முதலமைச்சராக வரவேண்டும் என, நீங்கள் தீர்மானிக்க முடியாது அதிகாரம் பறிக்கப்படும் கருணாநிதி குடும்பம் தான் நிர்ணயிக்கும் அப்படியானால் மக்களாட்சி அல்ல ஜனநாயக ஆட்சி அல்ல ஆகவே ஜனநாயகம் மீண்டும் மலர வேண்டும் என்று சொன்னால் விவசாயி மகனாக பிறந்து 50 ஆண்டுகள் உழைத்து ஒரு விவசாயி முதல்வராக குடிமராமத்து திட்டம், 11 மருத்துவ கல்லூரி என்று மாறி மாறி வழங்கி இருக்கிற வாழும் வள்ளலாக இருக்கிற புரட்சிதமிழர் எடப்பாடியார் தலைமையில் மக்களாட்சி ஜனநாயக ஆட்சி மலர வேண்டும் என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு:
மதுரை.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு,
அதிமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் 100 கோவில்களில் வழிபாடு மற்றும் 100 கிராமங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, இன்று உசிலம்பட்டி அருகே தொட்டப்ப நாயக்கணூர் கிராமத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என, தொட்டப்பநாயக்கணூர் முத்தாலம்மன், சந்தனமாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து , கிராம பொதுமக்கள் 200 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமும், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், முன்னாள் தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் நாராயணசாமி, உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. நீதிபதி தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் வழங்கினர்.
பின்னர் பேசிய, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். இன்றைக்கு , இந்த தாய் தமிழ்நாட்டு மக்கள் வரவேற்க இருக்கிற எடப்பாடியார் எழுச்சி பயணம் போய்க் கொண்டிருக்கிறார். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் 8 நாளா சுற்றுப்பயணம் போயிருக்கிறார்.
மக்கள் வெள்ளமென வரவேற்கிறார்கள்.
முதலமைச்சருக்கு வயிற்றெரிச்சல் ஏன்னா. அவரும் போய் தான் பார்க்கிறார் நடந்து, டெம்போவில், ட்ரெயினில், விமானத்தில் போய் பார்க்கிறார் எல்லாத்தையும் போய் பார்க்கிறார்.
ஆனால், அவரைப் பார்க்கத்தான் மக்கள் யாரும் இல்லை.
அதனால் அவருக்கு என்ன வயிற்று எரிச்சல் என்றால், எடப்பாடியார் விவசாயி மகன் சாமானிய மகன் எதிர்கட்சித் தலைவர் அவர் போவதற்கு பண்ருட்டி, விருத்தாச்சலம், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர். ஏனென்றால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
522 வாக்குறுதிகள் பட்ட நாமத்தை போட்டு விட்டார் எடப்பாடியார் பஸ்ஸில் வருகிறார். அவரை வசைபாடுகிறார் இது சுந்தரா ட்ராவல்ஸ் ம முதலமைச்சர் , வருங்கால முதல் அமைச்சர் எடப்பாடியார் அவர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் புரட்சித்தமிழர் எடப்பாடியார் ,
வருகிற பயணம் சுந்தரா ட்ராவல்ஸ் பயணம் அல்ல உங்களுடைய மக்கள் விரோத அரசுக்கு முடிவு கட்டுகிற மக்கள் நம்பிக்கை பெற்றிருக்கிற அந்த ட்ராவல்ஸ் தான்., அங்கே எழுச்சி பயணம் வந்து கொண்டிருக்கிறார்.
உங்களுடைய முடிவு காலம் வந்துவிட்டது மக்கள் நிம்மதியாக இல்லை இன்றைக்கு விலைவாசி சொல்லவே வேண்டாம் கத்திரிக்காய்,தக்காளி, வெண்டைக்காய் எதுவும் வாங்க முடியல வெங்காயம் கூட வாங்க முடியவில்லை வெங்காய ஆட்சியில் இதுதான் நிலைமை 1000 ரூபாய் கூட வாங்க முடியல எப்போ வீட்டுக்கு போகும்போது எப்ப தருவ எப்ப தந்திருக்கனும் இப்ப வீடு வீடா வர்றோம் மனு கொடுக்கணும் வாங்க வாங்க என்று சொல்றீங்க வீட்டுக்கு போகும்போது வாங்க வாங்க என்றீர்கள்..
எங்கள் எடப்பாடியார் வருவார் இந்த 1000 ரூபா அதுக்கு மேல எங்க எடப்பாடியார் நிச்சயமாக சொல்கிறேன் உறுதியாக சொல்கிறேன் நீங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாக மகளிர் உரிமை தொகையை அனைவருக்கும் தருவார்.
அம்மா அவர்கள் கொடுத்தார்கள் ஆயுள் முழுவதும் அம்மா அவர்கள் கொடுத்தார்கள்
35 லட்சம் பேருக்கு அம்மா அவர்கள் 1000 ரூபாய் கொடுத்தார்கள். திமுக கொடுத்தது 1200 கோடி அம்மா அவர்கள் 4200 கோடி கொடுத்தார்கள்.
நாளைக்கு வெள்ளிக்கிழமை ஆடி வெள்ளி அம்மன் கோயிலில் போயி சாமி கும்பிடுவோம் ஆத்தா மாரியாத்தா காளியாத்தா காப்பாத்து ஆத்தா என்று காலையில் கொடுக்கிற மனுக்களுக்கு மாலையில் தீர்வு கண்டது அதிமுக.,
இப்போது சொல்கிறார்கள் உங்களுடன் ஸ்டாலின் இப்போ 4 வருஷமா யாருடன் இருந்தீர்கள் ஸ்டாலின் என்று மக்கள் கேட்கிறார்கள்.
நம்முடைய கஷ்டத்தை அறியாத முதலமைச்சராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் விபத்தில் வந்த காரணத்தினாலே நம்முடைய கஷ்டங்கள் தெரியவில்லை, அறியவில்லை, புரியவில்லை, தெளியவில்லை சட்டசபையில் எடுத்துச் சொன்னாலும் கேட்பதற்காக அவர் தயாராக இல்லை அவர் கனவுலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார், மாயா உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஆகவே தான், நிஜத்தை உணர வைப்பதற்கு 2026 இல் , எடப்பாடியார் தலைமையில் இரட்டை இலை ஆட்சி எம்ஜிஆரின் ஆட்சி, அம்மாவின் ஆட்சி மலர வேண்டும் ஜனநாயக மலர வேண்டும்.
இந்த நாட்டினுடைய முதலமைச்சராக யார் வர வேண்டும் என, தீர்மானிக்க வேண்டும் கருணாநிதி குடும்பம் தீர்மானிக்க கூடாது இந்த நாட்டினுடைய மக்கள் தான் நாட்டினுடைய முதலமைச்சராக யார் வரவேண்டும் என்பதை தீர்மானிப்பதான் உங்களுக்கு வாக்குரிமை சுதந்திர நாட்டில் கொடுக்கப் பட்டுள்ளது.
ஆனால், நீங்கள் திமுகவுக்கு வாக்களித்தால் யார் முதலமைச்சராக வரவேண்டும் என, நீங்கள் தீர்மானிக்க முடியாது அதிகாரம் பறிக்கப்படும் கருணாநிதி குடும்பம் தான் நிர்ணயிக்கும் அப்படியானால் மக்களாட்சி அல்ல ஜனநாயக ஆட்சி அல்ல ஆகவே ஜனநாயகம் மீண்டும் மலர வேண்டும் என்று சொன்னால் விவசாயி மகனாக பிறந்து 50 ஆண்டுகள் உழைத்து ஒரு விவசாயி முதல்வராக குடிமராமத்து திட்டம், 11 மருத்துவ கல்லூரி என்று மாறி மாறி வழங்கி இருக்கிற வாழும் வள்ளலாக இருக்கிற புரட்சிதமிழர் எடப்பாடியார் தலைமையில் மக்களாட்சி ஜனநாயக ஆட்சி மலர வேண்டும் மலர வேண்டும் என, பேசினார்.