
கல்வி வளர்ச்சி நாள்
வாடிப்பட்டி, ஜூலை.17.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே பொட்டுலுப்பட்டி அரசு உதவி பெறும் காந்திஜி ஆரம்ப பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் நாகேஸ்வரன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் வேங்கட லட்சுமி முன்னிலை வகித்தார்.
ஆசிரியர் ஆசிர்வாதம் பீட்டர் வரவேற்றார். கல்வி குழுத் தலைவர் பொறியாளர் பொறியாளர் தனபால் கதை கவிதை நாடகம் நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். முடிவில் ,ஆசிரியர் எஸ்தர் டார்த்தி நன்றி கூறினார்.