
திட்டப் பணிகள் மதுரை ஆட்சியர் ஆய்வு.
மதுரை.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார்.
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் , திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், பனையூர் ஊராட்சி உள்ள பனையூர் வடக்கு குழந்தைகள் மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து பார்வையிட்டார். தொடர்ந்து, பனையூர் ஊராட்சியில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மானியத்தில் புதிய வீடு கட்டப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
மேலும், பனையூர் காலநடை மருத்துவமனையில் ஆய்வுக் கூடம், சிகிச்சை பிரிவு, கால்நடை மருந்தகம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு, அங்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள், மருத்துவ சேவையின் தரம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, பனையூர் ஊராட்சி, திருவள்ளுவர் நகர் மயானத்தில் உள்ள குளியல் தொட்டியில் தண்ணீரின் தரம் குறித்து ஆய்வு செய்து பார்வையிட்டார்.
பனையூர் கிராமத்தில், மகாலட்சுமி சுய உதவி குழுவினர் மானிய விலையில் வங்கி கடன் பெற்று கயிறு பின்னுதல் தொழில் செய்யும் பணியினை ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூபாய் 285.85 இலட்சம் மதிப்பீட்டில் 4.1 கி.மீ நீளத்தில் விராதனூர் ரோடு முதல் குசவபட்டி வரை தார் சாலை அமைக்கப்பட்ட பணியினை ஆய்வு செய்து பார்வையிட்டார்.
மேலும், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், விராதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 1.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள காய்ச்சல் வார்டு, பதிவு செய்யும் இடம், உள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு, உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், சோளாங்குருணியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 17.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டடப் பணிகளையும், வளையபட்டி கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடம் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) வானதி , இணை இயக்குநர்/திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) சௌ.தமிழரசி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.