
கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை இவாஞ்சலின் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக காமராஜரின் வழித்தோன்றல் சின்னத்தம்பி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் இனிப்புகளை அனைவருக்கும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் போது அலங்கரிக்கப்பட்ட காமராஜரின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்க்காண ஏற்பாடுகளை பள்ளியின் முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.






