March 2, 2026
மாநகராட்சி சார்பில் முகாம்: மேயர்:

மாநகராட்சி சார்பில் முகாம்: மேயர்:

”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் கொடுத்து பயன்பெறலாம்.

தமிழ்நாடு முதலமைச்சர் , இந்த ஆண்டு சட்டமன்ற பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என, அறிவித்து இருந்தார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர், அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் உரகப் பகுதிகளில் ”உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் துவக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமினை வரும் 15.07.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர், கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார்.

இத்திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள்/சேவைகளை விவரித்து, அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வழங்குவர். மேலும், இந்த முகாம்களில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்கு சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் ”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

”உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் குறித்த விபரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக மதுரை மாவட்டத்தில் 1,002 தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி 07.07.2025-அன்று முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும், முகாம் நடைபெறும் இடங்களில் போதிய குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுக சாய்வு தளம் வசதி மற்றும் மருத்துவ குழு மற்றும் அவர்களுக்கு சேவை செய்திட முகாம்களில் போதிய தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாநகராட்சிக்கு ஐந்து மண்டலங்களில் நடைபெறும் முகாம்கள் விவரம்.
வ.எண்.
நாள்
மண்டலம்
வார்டுஎண்.
முகாம் நடைபெறும் இடம்

17.07.2025

மண்டலம் 1
3 , 4
ஆனையூர் வார்டு அலுவலகம்

24.07.2025

8 , 11
மண்டலம் 1 (கிழக்கு) அலுவலகம்
சர்வேயர் காலனி

02.08.2025

36 , 37
தாகூர் பள்ளி, வண்டியூர்

08.08.2025

5 , 13
பாண்டியன் மகால்

17.07.2025

மண்டலம் 2
15 , 31
மடீட்சியா மகால்,
டாக்டர் அம்பேத்கார் சாலை,

24.07.2025

1, 2
புஷ்பம் கல்யாண மகால், அஞ்சல் நகர்

07.08.2025

26, 27, 28
சோலை மகால், செல்லூர்

12.08.2025

65, 66
ஆனந்தம் மகால், பாஸ்டின் நகர், அண்ணா மெயின் வீதி

17.07.2025

மண்டலம் 3
54, 76
சுற்றுலா பயணிகள் தகவல் மையம்,
பெரியார் பேருந்து நிலையம்

24.07.2025

52
சுற்றுலா பயணிகள் தகவல் மையம்,
பெரியார் பேருந்து நிலையம்

31.07.2025

50, 51
ஆதினம் மகால், வடக்கு மாசி வீதி,

08.08.2025

55
மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகம்

17.07.2025

மண்டலம் 4
86, 87
ராணி பொன்னம்மாள் கல்யாண மகால், தவிட்டு சந்தை

31.07.2025

43, 44
மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகம்

08.08.2025

46, 47
திருவள்ளுவர் பள்ளி,

14.08.2025

29, 30
இளங்கோ மாநகராட்சி மேனிலைப் பள்ளி, பனகல் சாலை செனாய்நகர்

17.07.2025

மண்டலம் 5
79, 80, 81
சேதுராஜன் பத்மா திருமண மகால், ஜெய்ஹிந்துபுரம்

24.07.2025

71, 74
மாநகராட்சி சமுதாய கூடம், பழங்காநத்தம்

02.08.2025

73, 78
சேசு மகால், சத்யசாய் நகர்

14.08.2025

97, 98
ஒக்கலிங்கர் காப்பு திருமண மகால் , திருப்பரங்குன்றம் எனவே, பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறுமாறு, மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளரால் கேட்டுக் கொள்ளப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *