
கரும்பு பயிரில், நோய் தாக்குதல்
உசிலம்பட்டி.
மதுரை, உசிலம்பட்டி அருகே கரும்பு பயிரில் கத்தாளைப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் மருந்து தெளித்து – விவசாயிகள் கரும்பு பயிர்களை மீட்டெடுத்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கே.போத்தம்பட்டி பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த கரும்பு பயிர்களில் கத்தாளைப்பூச்சி தாக்குதல் அதிகமாக காணப்படுவதால், கரும்பு பயிர்கள் சேதமடையும் சூழல் உருவானதாக கூறப்படுகிறது.
கரும்பு தோட்டத்தில் வழக்கம் போல ஆட்கள் சென்று மருந்து தெளித்தால், கரும்பு சோகைகள் மூலம் காயங்கள் ஏற்படும் நிலை காரணமாக இந்த கத்தாளைப்பூச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், இதனை சரி செய்யவும், கரும்பு பயிர்களை பாதுகாக்க அதே ஊரைச் சேர்ந்த ஜான்சி என்ற பட்டதாரி பெண் விவசாயி, தனது தோட்டத்தில் பயிரிட்டுள்ள 5 ஏக்கர் கரும்பு பயிர் பாதிப்படைந்துள்ளது குறித்து வேளாண் அலுவலர்கள், சர்க்கரை ஆலை அலுவலர்களிடம் முறையிட்டு, அவர்களின் ஆலோசனை படி ட்ரோன் மூலமாக மருந்து தெளிக்கும் நவீன தொழில்நுட்பம் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் மூலம் கரும்பு பயிர்களை மீட்டெடுப்பதுடன், செலவும் குறைவாகவே இருப்பதாகவும், நல்ல பலன் கிடைக்கும் என, நம்புவதாக விவசாயி ஜான்சி தெரிவித்தார்.