June 30, 2025
வாடிப்பட்டியில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணிபோலீஸ் இன்ஸ்பெக்டர் தொடக்கி வைத்தார்.

வாடிப்பட்டியில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணிபோலீஸ் இன்ஸ்பெக்டர் தொடக்கி வைத்தார்.

வாடிப்பட்டி, ஜூன்:27.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி காவல் நிலையம், கச்சை கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக, உலகப் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணி போடிநாயக்கன்பட்டி புனித சார்லஸ் உயர் நிலைபள்ளி யில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக வாடிப்பட்டி பஸ் நிலையம் வரை வந்து விட்டு மீண்டும் பள்ளிக்கு புறப்பட்டு சென்றது.

இந்த பேரணிக்கு, வட்டார மருத்துவ அலுவலர் ஹரிஷ் நிர்மல் குமார் தலைமை தாங்கினார்.வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் பழனி, சிவகுமார், துரை முருகன், பள்ளி தாளாளர் சதானந்தம், திரவியம்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஜஸ்டின் வரவேற்றார். இந்த பேரணியை, போலீஸ இன்ஸ்பெக்டர் வளர்மதி பேரணியை துவக்கி வைத்தார்.

இதில், தனி பிரிவு போலீஸ் பிரேம்நாத், சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், பூபன் சக்கரவர்த்தி சதீஸ், புவனேஸ்வரன், எட்டுக்கள் தனசேகரன், மாய கண்ணன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு புகையிலை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு வாசக அட்டையை கையில் ஏந்தி கோஷமிட்டு உறுதிமொழி எடுத்துக்
கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.