
கந்தர்வக் கோட்டை அருகே காடுகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு என்ற தலைப்பில் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் பேச்சுப்போட்டி.
கந்தர்வக்கோட்டை ஜீன் 27.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் நான்காவது வாரத்தை முன்னிட்டு காடுகள் மற்றும் வனவிலங்குகள் பாதுகாத்தல் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விபரங்களை கையாளுதல் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு மணிமேகலை தலைமை வகித்தார். ஆங்கில ஆசிரியர் சிந்தியா அனைவரையும் வரவேற்றார். மாணவர்கள் காடுகள் பாதுகாப்பு குறித்து பேசும் பொழுது காடுகளைப் பாதுகாப்பது என்பது காடுகளையும், அதைச் சார்ந்திருக்கும் உயிரினங்களையும், மனிதர்களையும் பாதுகாப்பதாகும். காடுகள் நிலச்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களில் இருந்து நம்மை காக்கின்றன, மண் வளத்தை மேம்படுத்துகின்றன, பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவுகின்றன, மேலும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
காடுகளைப் பாதுகாப்பதன் மூலம், நாம் நமது எதிர்கால சந்ததியினருக்கு ஒரு நல்ல வாழ்க்கையை உறுதி செய்ய முடியும்.காடுகள் மழை பொழிவை அதிகரிக்கின்றன, மண் அரிப்பை தடுக்கின்றன, நிலச்சரிவு மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து மக்களை காக்கின்றன. மேலும், காடுகள் பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவுகின்றன, பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு வாழ்விடமாக உள்ளன.
காடுகள் தூய்மையான காற்றை வழங்குவதன் மூலம், மக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
வனவிலங்கு பாதுகாப்பு என்பது வனவிலங்குகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் நடைமுறையைக் குறிக்கிறது. இது விலங்குகள் மற்றும் தாவரங்களின் அழிவைத் தடுக்கவும், இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கவும் மேற்கொள்ளப்படுகிறது என்று பேசினார்கள். இந்நிகழ்வினை அறிவியல் ஆசிரியர் ரகமதுல்லா ஒருங்கிணைத்தார். போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கோள்களும், விண்மீன்களும் என்ற தலைப்பில் புத்தகங்கள் வழங்கி பாராட்டப்பட்டது.