
தமிழ்நாடு திருவிழா நடைப்பாதை வியாபாரிகள் சங்கக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது.
மதுரை:
தமிழ்நாடு திருவிழா நடைப் பாதை வியாபாரிகள் நலச்சங்கம் கூட்டம், மதுரையில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் பி. வேல் பாண்டி தலைமை வகித்தார்.செயலர் எம். சையது அலிபாய் முன்னிலை வகித்தார். பொருளாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மாநில பொதுச் செயலர் வீ. மகேஸ்வரன், வியாபாரிகளுக்கு அரசு செய்ய வேண்டியும் பணிகள் பற்றி எடுத்துரைத்தார். நிர்வாகிகள் சையது ராஜா, மணி, ராமு, ராமச்சந்திரன்,பரமன் உள்ளிட்டோர், சங்கத்தின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார்.
முடிவில், ஆலோசகர் அபுபக்கர் நன்றி கூறினார்.






