
வாடிப்பட்டியில் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம்.
வாடிப்பட்டி, ஜூன்.16-
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூ ராட்சி பொன்மலை அடிவாரத்தில் உள்ள அன்பே கடவுள் மாற்றுத் திறனாளிகள் மறு வாழ்வு இல்லம் சார்பாகமாணவ மாணவிகளுக்கு
இலவச நோட்டு புத்தகம் மற்றும் பள்ளி உபகரணங் கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச் சிக்கு, பேரூராட்சிக் கவுன்சிலர் கார்த்திகா ராணி மோகன் தலைமை தாங்கி மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கினார். இல்ல செயலாளர் ஆசைத்தம்பி வரவேற்றார். இதில், ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில், இல்ல பொறுப்பாளர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.