
பெரியகுளம் அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் திருவிழா முகூர்த்தக்கால் ஊன்றுதல் நிகழ்வு
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் ஆனிப்பெருந் திருவிழாவினை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் முன்பு முகூர்த்தக்கால் ஊற்றப்பட்டது.
எதிர்வரும் ஜூலை 1ம் தேதி சாட்டுதல்,ஜூலை , 15 ல் மாவிளக்கு, ரத உற்சவம், 16 ல் அக்கினிச்சட்டி மற்றும் 22 ல் மறுபூஜை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர், மண்டகப்படி தாரர்கள், கோவில் பூசாரிகள் ஆகியோர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.