
பழனி : குழியில் தவறி விழுந்த பசுமாடு! பத்திரமாக மீட்டெடுத்த தீயணைப்பு - மருத்துவ குழுவினருக்கு பொதுமக்கள் பாராட்டு.!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் பழுதடைந்த செப்டிக்டேங் குழியில் பசுமாடு தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுசம்பந்தமாக அருகில் உள்ளவர்கள் தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் குழியில் விழுந்த பசு மாட்டை பத்திரமாக மீட்டனர். பசுமாடு குட்டி ஈன்றும் தருவாயில் இருந்துள்ளது. மேலும் குழியில் விழுந்ததால் கொம்பு உடைந்து காயம் ஏற்பட்டது.
இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள் கால்நடைத்துறை மருத்துவர்களுக்கு தகவல் கொடுத்து மருத்துவரை வரவழைத்து மாட்டுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பழனி கால்நடை உதவி மருத்துவர் ச.செந்தில்குமார் மற்றும் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி 1962 கால்நடை மருத்துவர் சிவபாரதி மற்றும் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
இதனையடுத்து அதே இடத்தில் பசுமாடு கன்று குட்டியை ஈன்று எடுத்தது. மாட்டிற்கு முறையாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயிரை காப்பாற்றிய தீயணைப்பு மற்றும் மருத்துவ குழுவினருக்கு பொதுமக்கள், பத்திரிக்கையாளர் தரப்பில் பாராட்டுக்களை தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நிருபர் நா.ராஜாமணி.






