March 2, 2026
ரூ 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய வணிகவளாக கட்டிடம் திறப்பு விழா

ரூ 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய வணிகவளாக கட்டிடம் திறப்பு விழா

தமிழ்நாடு துணை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெரியகுளம் புதிய பேருந்து‌ நிலையத்தில் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வணிக வளாக கட்டிடத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலின், சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட வணிக வளாக கட்டிடத்தில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.எஸ். சரவணகுமார், ஆகியோரது வழிகாட்டுதலின் படி பெரியகுளம் நகர் கழக செயலாளர் முகமது இலியாஸ், பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், நகராட்சி ஆணையாளர் தமீகா சுல்தானா, ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்,வார்டு செயலாளர்கள்,நகர்
மன்ற உறுப்பினர்கள், நகர் கழக நிர்வாகிகள்,இளைஞர் அணியினர், பாகமுகவர்கள் மாணவர் அணியினர், மகளிர் அணியினர், சார்புஅணி நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உட்பட கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *