March 2, 2026
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள திருராமேஸ்வரத்தில் திருத்தேரோட்டம்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள திருராமேஸ்வரத்தில் திருத்தேரோட்டம்.

திருவாரூர். ஜூன்.11.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் அருகே உள்ள திருராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி கோவிலில் திரு தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

திருநாமேஸ்வரத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்குட்பட்ட மங்களநாயகி சமேத இராமநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் எனக் கூறப்படுகிறது. இக்கோயில் ஈசனை லிங்க வடிவத்தில் ராமபிரானும், சீதாதேவியும் வணங்கி வழிபட்ட தலமாகும்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். அதன்படி கிராமவாசிகள் மற்றும் பக்தர்கள் ஆகியோரின் ஏற்பாட்டின் படி கடந்த மே மாதம் 31ஆம் தேதி கொடியேற்றப்பட்டு வைகாசி பெருவிழா தொடங்கியது.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் மங்களநாயகியும் ராமநாதசாமியும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். கோயிலின் முக்கிய விழாவான தேரோட்ட திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அருள்மிகு மங்களநாயகி சமேத ராமநாதசாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நாதஸ்வர இசையுடன் தேரினில் எழுந்தருளினார்.

தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு, செங்கமலத்தாயார் அறக்கட்டளை மகளிர் கல்லூரி தாளாளர் திவாகரன் தேரினை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடக்கு வீதி மேல வீதி தெற்கு வீதி வழியாக கீழ வீதியில் நிலையை அடைந்தது. அதனைத் தொடர்ந்து கோயில் அர்ச்சகர் சோமாஸ்கந்தன் மற்றும் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க அருகில் உள்ள தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி செய்யப்பட்டது. தேர் திருவிழாவில் எம் எல் ஏ பூண்டி கலைவாணன் உட்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பட விளக்கம். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே திருராமேஸ்வரத்தில் உள்ள மங்களநாயகி சமேத ராமநாதசுவாமி கோவிலில் திருத்தேரோட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *