March 4, 2026
ரூபாய் 22,19,375/-லட்சம் செலவில் வாய்க்கால் மற்றும் சாலை அமைக்க பூமி பூஜை.

ரூபாய் 22,19,375/-லட்சம் செலவில் வாய்க்கால் மற்றும் சாலை அமைக்க பூமி பூஜை.

புதுச்சேரி ஜூன் -9

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வாணரப்பேட்டை தமிழ்த்தாய் நகரில் உள்ள பாவாடைப் படையாட்சி வீதியில் வாய்க்கால் மற்றும் சாலை அமைக்கும் பணியினை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 22,19,375/-லட்சம் செலவில் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் பூமி பூஜையில் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார் .

ஏற்கனவே அப்பகுதியில் கடுமையான குடிநீர் பிரச்சனை நிலவி வந்த நிலையில் போர்வெல் அமைத்து தண்ணீர் பிரச்சனைக்கு எம்எல்ஏ நடவடிக்கை எடுத்து தீர்வு கண்டார். மேலும் அப்பகுதியில் உள்ள குளத்தின் முன்புறம் சீரமைத்து அனைவரும் ரசித்து பாராட்டும் வகையில் சிறுவர்கள் விளையாட ஏதுவான சூழ்நிலைகளை உருவாக்கினார். அப்பகுதி முழுவதும் அடிப்படை வசதிகள் வாய்க்கால் மற்றும் சாலைகளை சீரமைத்துத் தந்தார்.

அதன் தொடர்ச்சியாக தற்பொழுது வாணரப்பேட்டை தமிழ்த்தாய் நகர் சார்ந்த மீதமுள்ள வீதிகள் முழுவதும் வாய்கால் மற்றும் சாலை அமைக்கும் பணியினை இன்று சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் பூமி பூஜை போட்டு துவங்கி வைத்தார்

அவருடன் துணை செயற்பொறியாளர் யுவராஜ் இளநிலைப் பொறியாளர் சண்முகசுந்தரம் மற்றும் ஊர் பொதுமக்கள் கழகத் தோழர்கள் தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ஹிரிகிருஷ்ணன், திமுக ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்க வேல், கிளை செயலாளர்கள் சந்துரு(எ) சந்திரன், செல்வம்,கோபி,, பொருளாளர் மணிமாறன், மாநில பிரதிநிதி கணேசன் , விடுதலை சிறுத்தை கட்சி பக்தவாச்சலம், மற்றும் திமுக தோழர்கள் செழியன், வடிவேல், கார்த்தி, ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *