
பெரியகுளம் A 485 கூட்டுறவு பண்டக சாலை விற்பனையாளர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கும் செயலாட்சியர்
தேனி மாவட்டம் பெரிய குளம் தாலுகாவிற்கு உட்பட்ட 17 ரேஷன் கடைகளில் பணிபுரிந்து வரும் விற்பனையாளர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.
இந்நிலையில் விற்பனையாளர்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்காமலும், சிஐடியு மற்றும் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்காமலும் தன்னிச்சையாக, விற்பனையாளர்களை இடமாற்றும் முடிவில் ஈடுபட்டு உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுவாக ரேசன் கடைகளில் முறைகேடு மற்றும் ஏதேனும் குற்றச்சாற்றுகள் ஏற்பட்டால் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களை இடமாற்றும் செய்வது வழக்கம்.
தற்போது விற்பனையாளர்களை கட்டாயப்படுத்தி அவர்களை இடமாற்றம் செய்யும் உத்தரவை செயலாட்சியர் பிறப்பித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் விற்பனையாளர்கள் அனைவரையும் உள்நோக்கத்தின் அடிப்படையில் செயலாட்சியர் இடமாற்றம் செய்துள்ளாரா? என்ற கேள்வி எழுகின்றது. ekyc எனப்படும் கைவிரல் ரேகை பதிவு பணிகள் ஒவ்வொரு கடைகளிலும் முழுமை பெறவில்லை, இந்நிலையில் தாம் ஒதுக்கீடு செய்துள்ள கடைகளில் பணிபுரியாவிட்டால் தாமே அந்த கடையில் பணிபுரிந்து வீடியோ விற்பனையாளர்களுக்கு அனுப்புவதாகவும் கண்டிப்பு காட்டியுள்ளாராம் செயலாட்சியர்.
ஒரு சிலரை திருப்திபடுத்தவே பலருக்கும் பணிமாறுதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ஒரு சில விற்பனையாளர் பணி ஓய்வு பெறும் நிலையில்,தற்போது பணிமாறுதல் செய்து, மீண்டும் காலிப்பணியிடத்திற்கு ஏற்ப பணிமாறுதல் செய்ய பட வேண்டிய சூழல் உள்ளது. தற்போது பணிபுரிந்து வரும் விற்பனையாளர்களில் ஒரு சிலர் பணி நிறைவு பெற்ற பின்னர் பணிமாறுதல் செய்யப்பட வேண்டும் என்பதே விற்பனையாளர்களின் கோரிக்கை.
செயலாட்சியரின் எதேச்சதிகாரமிக்க செயலால் விற்பனையாளர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் மேற்பார்வையில் பணிமாறுதல் நடைபெற வேண்டும் என்பதே விற்பனையார்களது கோரிக்கையாகும்.