
சிறந்த சமூக சேவைக்கான விருது
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் கோடை கொண்டாட்டம் தங்கம் மஹாலில் நடைப்பெற்றது.இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் அருள் மெர்சிசெந்தில்குமார், அறந்தாங்கி நிஷா, குக்குவித்து கோமாளி புகழ் தங்கதுரை, தொகுப்பாளர் ஆசிக், டிவி சீரியல் நடிகை ரீமா அசாக், விஜய் டிவி காமெடி புகழ் திவாகர் ஆகியோர்களின் முன்னிலையிலும் ரியாஸ்கான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள், பாதுகாப்பு பணிகள், குழந்தைத்தொழிலாளர்முறை ஒழிப்பு, மீண்டும் குழந்தைகள் பள்ளியில் சேர்த்தல், தொழிலாளர்கள் உரிமைகள் மற்றும் சட்டவிழிப்புணர்வு, குழந்தை திருமணம் தடுத்தல், அரசுத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பணிகளுக்கு அமைதி அறக்கட்டளை மேலாளரும், குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பு உறுப்பினரும், ஊழல் தடுப்பு மற்றும் விஜிலென்ஸ் ஆலோசனை மையம் இந்தியாவின் உறுப்பினரும் டாக்டர் ஆ. சீனிவாசன் அவர்கள் சிறந்த சமூக சேவைக்கான விருதினை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், நண்பர்கள், பத்திரிகை நண்பர்கள், உறவினர்கள் பாராட்டி வருகின்றனர்.