March 3, 2026
தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச் ராஜா ஜிக்கு அனுமதி மறுத்ததால் திண்டுக்கலில் சற்று நேரம் பரபரப்பு

தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச் ராஜா ஜிக்கு அனுமதி மறுத்ததால் திண்டுக்கலில் சற்று நேரம் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டியில் ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் சாமி கும்பிடு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தேர் ஊர் பவனி நடைபெறும் இதில் குறிப்பிட்ட பகுதிக்குள் மேளதாளங்கள் மற்றும் வான வேடிக்கை செய்யக்கூடாது என்று ஒரு தரப்பினர் கூறியதால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் இரு தரப்பில் உள்ள மக்களும் ஒருவருக்கு ஒருவர் கைகலப்பில் ஈடுபட்டதால் வக்கம்பட்டி ஒரு தரப்பினரிடையே பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டது இதுகுறித்து புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன் மற்றும் ஆத்தூர் தாசில்தார் முத்து முருகன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது பேச்சுவார்த்தை சுமுக நிலை எட்டப்படாத நிலையில் திருவிழா நிறுத்தப்பட்டு இதைத் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிவசேனா மாநிலத் தலைவர் சி கே பாலாஜி மற்றும் பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் இந்து அமைப்புகள் ஆதரவு தெரிவித்த நிலையில் திண்டுக்கல் தோட்டத்து பகுதியில் கால்பந்தாட்ட போட்டியை துவக்கி வைக்க வந்த பாரதிய ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச் ராஜா போராட்டக்காரர்களுக்கு ஆதரவுக்கு தெரிவிக்கும் வகையில் போராட்ட களத்திற்கு செல்ல முயன்றபோது துணை சூப்பிரண்டு மற்றும் தாசில்தார் மற்றும் காவல் அதிகாரிகள் அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதனால் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது பின்பு நத்தம் ரோட்டில் அமைந்துள்ள பாரதிய ஜனதா அலுவலகத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட வக்கம்பட்டி ஊர் பொதுமக்கள் எச் ராஜாவை சந்தித்து பாரதிய ஜனதா மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் சிவசேனா மாநில தலைவர் சி கே பாலாஜி முன்னிலையில் போராட்டத்திற்கு பிரச்சனைக்கு தீர்வு பெற்று தரும்படி கோரிக்கை விடுத்தனர் எச் ராஜா காவல்துறை அதிகாரிகளிடம் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்தும் தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் விரைவில் தீர்வு காணும் படியும் தொடர்ந்து இந்து மக்களின் மீது வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் வருகின்ற ஜூன் 6-ம் தேதி பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என கூறினார் இதன் பிறகு பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *