March 2, 2026
சில்வார்பட்டியில் சந்தன கருப்பு, பிரம்மநாதன் கோவிலில் 21 தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சில்வார்பட்டியில் சந்தன கருப்பு, பிரம்மநாதன் கோவிலில் 21 தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ நல்ராக்கு பெருமாள், பிரம்மநாதன், சந்தன கருப்பு, பேச்சியம்மன், செம்பாயி அம்மன் உள்ளிட்ட 21 தெய்வங்களுக்கு சிதம்பர சிவாச்சாரியார் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடந்த 16ஆம் தேதி அன்று காலை தீர்த்தம் கொண்டு வருதல், விக்னேஸ்வர பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து ஹோம பூஜைகள், முளைப்பாரி ஊர்வலம் என பல்வேறு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்று பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *