
சோழவந்தான் அருகே அய்யப்ப நாயக்கன்பட்டி அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் சென்றனர்.
சோழவந்தான் மே 7
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட
அய்யப்ப நாயக்கன்பட்டி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து பத்திரகாளியம்மன் கோவிில் இருந்து ஊர்வலமாக காமராஜர் சிலை வரை வந்து பின்பு அங்கிருந்து குருவித்துறை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை வரை சென்று கோவிலை வந்தடைந்தனர்.

கோவிலில் முளைப்பாரி வைத்து பெண்கள் கும்மி பாட்டு பாடினர் முளைப்பாரி ஊர்வலத்தின் போது பாலு நாடார் குருவம்மாள் நினைவாக விபி கந்தசாமி கே செல்வராணி முன்னாள் வார்டு உறுப்பினர் குடும்பத்தினர் முளைப்பாரி எடுத்து வந்த பெண்கள் அனைவருக்கும் அன்பளிப்புகள் வழங்கினர் இதில் அய்யப்ப நாயக்கன்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் முளைப்பாரி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.