
பெரியகுளத்தில் வீடு கட்டுமான பணியின் போது படிக்கட்டு இடிந்து விழுந்து கூலித் தொழிலாளி பலி
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை காயிதே மில்லத் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜாபர் சுல்தான். இவர் வீட்டில் பராமரிப்பு மற்றும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கெங்குவார்பட்டி பகவதி நகர் பகுதியை சார்ந்த கருத்தையா மகன் காமாட்சி 38/25, ராமு மகன் அறிவுராஜா 34/25 ஆகியோர் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டு வாசலில் செப்டிக் டேங்க் அமைப்பதற்கான மண் வெட்டி கொண்டிருந்த போது திடீரென வாசல் படிக்கட்டுகள் உடைந்து காமாட்சி மீது விழுந்தது. இதில் காமாட்சி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதினா பள்ளி தலைவர் உமர் கொடுத்த தகவலின்படி பெரியகுளம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறை என சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீடு கட்டுமானப் பணியின் போது உயிரிழந்த காமாட்சி என்வரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.