
விஜயை வரவேற்பதற்காக மதுரை விமான நிலையத்தில் கூடிய கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மீது அவனியாபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு.
பயணிகளுக்கு தொந்தரவு செய்தல் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தல் சட்ட விரோதமாக கூடியது என மூன்று பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட செயலாளர்கள் தங்கப்பாண்டி மற்றும் கல்லணை ஆகிய இருவரும் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் நடைபெறும் படப்பிடிப்பில், பங்கேற்பதற்காக கடந்த மே ஒன்றாம் தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்து அடைந்தார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவரை வரவேற்பதற்காக ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்களும் ரசிகர்களும் மதுரை விமான நிலையத்தில் கூடினர்.
இதனால், விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் சேதம் அடைந்தது. போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டது பயணிகள் விமான நிலையத்திற்கு செல்ல கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
இந்த நிலையில், மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் சினிமா நடிகருமான விஜய் அவர்கள் வருகை தந்ததை முன்னிட்டு அவரை வரவேற்கும் பொருட்டு தெற்கு மாவட்டச் செயலாளர் வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கப்பாண்டி மற்றும் கல்லணை உட்பட இன்னும் சிலர் தலைமையில் கூடிய கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் சட்டவிரோதமாக ஒன்று கூடி பொது மக்களின் வாகனங்கள் மற்றும் விமான பயணிகளின் வாகனங்களை செல்லவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.