May 4, 2025
மே நாள்

மே நாள்

முகவரி மாறின தோழா! தோழா!
முன்பின் ஆயின தோழா! தோழா!
உழைப்பது மாறின தோழா! தோழா!
உண்பவர் ஆயினர் தோழா! தோழா!
அறிவென ஆயினோம் தோழா! தோழா!
அதனால் ஆக்கம் மாறின தோழா! தோழா!
காப்பது போயின தோழா! தோழா!
இயற்கை காலிடமாகவே தோழா! தோழா!
உண்பதும் உடுப்பதும் பகட்டாய் தோழா! தோழா!
உறுதிகள் பாய்ச்சலில் போய்விட தோழா! தோழா!
யாவும் கற்பனைக் காவலாய் தோழா! தோழா!
ஆவதும் அழிவதும் இன்றி தோழா! தோழா!
பேச்சுகள் ஆயின தோழா! தோழா!
பெறும் பயன் மாறின தோழா! தோழா!
நாடது உயர்ந்திட தோழா! தோழா!
நலமென சிலருக்கே தோழா! தோழா!
மாடென உழைப்பும் சிறப்பும் தோழா! தோழா!
மங்கின எங்குமே தோழா! தோழா!
ஆக்கங்கள் எதுவென என்றே தோழா! தோழா
அறிய மறந்திட தோழா! தோழா!
மயக்கங்கள் ஆள ஏக்கமும் தூக்கமும் தோழா!
மதிப்புகள் இழந்தன உழைப்பும் தோழா! தோழா!
வாழ்ந்தவர் போயினர் தோழா! தோழா!
வழியில் வகை தெரியாதோராய் தோழா!
எல்லாம் தோற்றது இன்று தோழா! தோழா!
இனம் புரியாதவர்கள் நீச்சலில் தோழா! தோழா!

பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழர் தன்னுரிமைக் கட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.