
அகில இந்திய டிஎன்டி அரசியல் முன்னணி கூட்டமைப்பு தலைவர் எம்.சுப்பாராவ் 25 கோடி டி.என்.டி மக்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அனாதையாக விடுபட்டதாக ஆதங்கம்.
நிலக்கோட்டை. மே. 2- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு சார்பாக மே தின விழாவும் மகளிர் அணி பொறுப்பாளர்களுக்கு பரிசளிப்பு விழாவும் அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் கருத்தரங்கம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் தலைமையில் நடைபெற்றது.

தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படத் தயாரிப்பாளர் செளத்ரி தேவர், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் நவமணி பிரபாகரன், பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு பொருளாளர் இளங்கோ ஆகியோர்கள் முன்னிலை வைத்தனர்.
மகளிரணி மாநில செயலாளர் வசந்தி வரவேற்று பேசினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய டி என் டி அரசியல் முன்னணி கூட்டமைப்பு தலைவர் எம்.சுப்பாராவ் கலந்துகொண்டு கூட்டத்தில் பேசியதாவது:- இந்தியாவில் உள்ள டிஎன்டி இன மக்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிட்டு எழுதவில்லை. டிஎன்டி சமூகத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 250க்கும் மேற்பட்ட சமுதாய மக்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பின்பு சுதந்திரத்திற்காக பாடுபட்ட இந்த டிஎன்டி இன மக்களுக்கு என்ன காரணத்திற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்று புலப்படவில்லை. இந்த மக்கள் பெரும்பாலானோர் நாடோடிகளாக வாழ்ந்ததாலோ ஒரு சரியான அந்த சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் யாரும் இது பற்றி அறியாமல் இருந்ததாலோ இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலேயே டி என் டி என்ற சமூகத்தை வேரோடு பிடுங்கி எடுத்துள்ளார்கள்.
இதுகுறித்து எத்தனையோ ஒரு நபர் கமிஷன் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அனைத்தும் தெளிவாக விளக்கவில்லை. அந்த ஒரு நபர் கமிஷனும் குறிப்பாக 2008ல் எங்கள் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று அன்றைய டிஎன்டி அமைப்பின் தலைவராக இருந்த பாலகிருஷ்ணா ரேன் கே அவர் எழுதிய அறிக்கையில் டிஎன்டி னுடைய தன்மையை ஆங்காங்கே குறிப்பிட்டு இருந்தாலும் முறையாக கண்துடைப்பு வேலை மட்டுமே நடைபெற்றது. இதன் காரணமாக இந்தியாவில் 25 கோடியை டிஎன்டி இன மக்கள் அனாதையாக அரசியலமைப்புச் சட்டத்திலேயே இல்லாத ஒரு வேடிக்கை அதிர்ச்சியை கொடுக்கக்கூடிய சம்பவம் நடந்துள்ளது .
அதன்பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட நரேந்திர மோடி உத்தரவின் படி கடந்த 2018 ஆண்டுகளுக்கு முன்பு டிஎன்டி மீண்டும் மத்திய அரசு ஒரு ஒரு நபர் தலைவர் இதாதே தலைமையில் நியமிக்கப்பட்டு அவர் எழுதிய அறிக்கையில் முழு டிஎன்டி மக்களின் வாழ்வாதாரம் பற்றி எழுதி இருந்தாலும் இதாதே எழுதியதில் டி.என்.டி அல்லாதவர்களையும் டி.என்.டி குழுவில் சேர்த்து ஒரு சிக்கலை ஏற்படுத்திச் சென்றார். இதனால் இந்தத் திட்டம் இன்று வரை கிடப்பில் போடப்பட்டு விட்டது.
ஆகையால மத்திய அரசு உடனடியாக அரசியல் அமைப்பு சட்டத்தில் டி என் டி காக மூன்றாவது இடத்தில் பட்டியல் என்றமத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும். எனவே தற்போது நடைபெறும் சாதிவாரிய கணக்கெடுப்பின்போது மத்திய அரசு எஸ்.சி,எஸ்.டி ,ஓ.பி..சி என்று இருப்பது போன்று எஸ்.சி ,எஸ்.டி, டி.என்.டி என்ற ஒரு புதிய பட்டியல் 3 வது இடத்தில் விசாரணைக்கு வரும் விண்ணப்பத்தில் இதுபோன்று டி என் டி காக தனி இடம் மத்திய அரசு ஒதுக்கி தர வேண்டும் என்ற கோரிக்கையும் பதிவு செய்தார்.