
நாய் கடித்ததில் ஆடு, சேவல் பலி!
மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் பாரதிதாசன் தெருவில் வசித்து வரும் மகேஷ் என்பவர் ஆடு , கோழி , சேவல் போன்ற கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று நள்ளிரவு 2 மணியளவில் ஆடு கத்தும் சத்தம் கேட்டதால் ஆட்டு பட்டியில் சென்று பார்த்துள்ளார். அப்போது நாய் ஆட்டை கடித்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த நபர் நாயை விரட்டி விட்டு ஆட்டை பார்த்தபோது ஆடு செத்து கிடந்துள்ளது.
இதுசம்பந்தமாக இன்று காலை விசாரித்து பார்த்த போது அதே ஊரை சேர்ந்த திருவள்ளுவர் வீதியில் வசித்து வரும் ஒருவர் ஐந்துக்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வருகிறார். இரவு நேரத்தில் நாய்களை கட்டி வைக்காததால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.
இதற்கு முன்பு அதே நபரான மகேஷ் என்பவருடைய ஆட்டை நாய் கடித்ததால் மூன்று ஆடுகள் இறந்து விட்டன. மேலும் பத்துக்கும் மேற்பட்ட சேவல்களை அதே நாய் வேட்டையாடி இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட நபரான மகேஷ் என்பவர் இச்சம்பவம் குறித்து கூறுகையில், தொடர்ந்து இதேபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. விலைகொடுத்து வாங்கி வளர்த்து வரும் ஆடு , சேவல் , கோழிகளை நாய்கள் வேட்டையாடி வருகிறது. இதனை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுப்பதோடு இதுவரை இறந்துபோன ஆடுகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். மேலும், மாமிசம் சாப்பிட பழகும் நாய்களால் இரவு நேரங்களில் கால்நடைகளை குறிவைக்கும் வெறிபிடித்த நாய்களால் கால்நடைகள் மட்டுமில்லாமல் பொதுமக்கள் , குழந்தைகள் என பலருக்கு ஆபத்து ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.
எனவே இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலருடைய கோரிக்கையாக உள்ளது.