
அதிகரித்து வரும் கொழுப்பு படிந்த கல்லீரல் பாதிப்பு-கல்லீரல் நோய்களுக்கு தீர்வு காண வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் ஆரம்ப நிலையிலேயே பரிசோதனையை வலியுறுத்தும் நிபுணர்கள்.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அதிகரித்து வரும் கொழுப்பு படிந்த கல்லீரல் பாதிப்பு குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
சமீப காலமாக கொழுப்பு படிந்த கல்லீரல் பாதிப்பு அதிகரித்து வருகிறது ஆரோக்கியமில்லாத வாழ்க்கை முறை உடற்பருமன் மற்றும் நீரிழிவு ஆகிய காரணிகளால் கல்லீரலில் அளவுக்கதிகமாக சேர்வதே இதனை உருவாக்குகிறது.
தொடக்க நிலையிலேயே நோயறிதல் உரிய நேரத்திற்குள் எடுச்சை பெறுதல் வாழ்க்கை முறை மாற்றங்களை செய்தல் மற்றும் இதற்கு காரணமான மூல காரணிகளின் முறையான மேலாண்மை ஆகியவை கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு இன்றியமையாதவை என்று மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மகுந்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் 19 அன்று அனுசரிக்கப்படும் உலக கல்லீரல் தினத்தையொட்டி நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பு நிகழ்ளில் பேசிய நிபுணர்கள், ஆரோக்கியமற்ற உணவுமுறைகள், அடிக்கடி பேக்கரி தயாரிப்புகளை உட்கொள்ளுதல் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானங்களையும், மதுபானங்களையும் அருந்துதல் ஆகியவை கல்லீரல் நோய்க்கு அதிகமான பங்களிப்பை வழங்கி வருகின்றன. என்று குறிப்பிட்டனர். குறிப்பாக இளவயது நபர்கள் மத்தியில் கல்லீரல் நோய் அதிகமான காணப்படுகிறது என்று கவலையுடன் அவர்கள் சுட்டிக்காட்டினர் இத்தகைய விரும்பத்தகாத பழக்கவழக்கங்கள், உடற்பருமன் மற்றும் நீரிழிவு போன்ற வளர்சிதை மாற்ற சீர்கேடுகளுக்கும் வழிவருக்கும் கல்லீரல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், கல்லீரல் நோய் வராமல் தடுக்கவும், ஊட்டச்சத்து மிக்க உணவின் முக்கியத்துவத்தை மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தினர் ‘உணவே மருந்து’ என்ற இந்தாண்டு கல்லீரல் சின் கருப்பொருளை இதற்கு எடுத்துக்காட்டாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இதுகுறித்து மருத்துவ இயக்குநரும் குடல், இரைப்பை அறுவை சிகிச்சை துறையின் தலைவருமான டாக்டர் ரமேஷ் அர்த்தனாரி இந்நிகழ்வில் பேசுகையில் MASLD என்பது மூன்றில் ஒருவரை பாதிக்கிறது.
மோசமான உணவுமுறை பழக்கவழக்கங்கள் மற்றும் உடல் இயக்கமற்ற வாழககை முறைகளே இதற்கு பிரதான காரணங்களாக இருக்கின்றன.
இதற்கு உரிய சிசெசை பெறாமல் அவசியம் செய்யப்படுமானால் க இது தீவிரமாகும் மீண்டும் சரி செய்ய முடியாத கல்லீரல் சேதத்தை ஏற்படுத்தும் ஆரோக்கியமான உணவு முறை வாழ்க்கை முறை மதுபானத்தை தவிர்ப்பது சரியான உடல் எடையை பேணுவது மற்றும் தவறாமல் உடற்பயிற்சி செயவது ஆகியவை கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. என்பதை இது அடிக்கோட்ட்டு காட்டுகிறது.
ஹேபடைட்டிஸ் வைரஸ்கள் பற்றிய விழிப்புணரவு அவைகள் வராமல் தடுப்பது மற்றும் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவது ஆகியவை கல்லீரல் தொடரபுடைய ஆரோக்கிய பிரச்சனைகளும் சிக்களும் வராமல் தடுப்பதிலும் மற்றும் ஆபத்துகளை குறைப்பதிலும் இன்றியமையாதவையாக இருக்கின்றன என்று கூறினார்