March 2, 2026
கன்னியாகுமரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாடு நடைபெற்றது.

கன்னியாகுமரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாடு நடைபெற்றது.

நாகர்கோவில், ஏப்.18-
கன்னியாகுமரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம் எல் மாஸ்லின்மாவட்ட மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் மலர் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் சந்திரா, சுனிதா முன்னிலை வகித்தனர்.

மாவட்ட குழு உறுப்பினர் சார்ஜ் வரவேற்றார். இந்த மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கல்யாண சுந்தரம், யோகேஸ்வரன், சங்கரி,மாநில குழு உறுப்பினர் பிச்சைமணி ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

இந்த மாநாட்டில் மாவட்ட செயலாளராக சி.பி.லைசட் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்களாக 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த மாநாட்டில் ஒன்றிய அரசுமும்மொழி கொள்கையை திணிப்பதை கண்டித்தும், தமிழகம் முழுவதும் அனுமதி இன்றி செயல்பட்டு வரும் கல்குவாரிகளை மூடிட வேண்டும் என்றும், சுகாதாரக் கேடை உருவாக்கும் அனுமதி இன்றி இயங்கி வரும் பன்றி இறைச்சிக்கூடங்களை அப்புறப்படுத்த வேண்டும். குடிநீர் குளங்களில் கோழி கழிவுகள் மற்றும் மக்காத குப்பைகள் போடுவதை தடுக்க வேண்டும் என்றும், இலங்கை அரசு தமிழக மீனவர்களை தாக்கி படகுகளை கைப்பற்றி அபராதம் வசூல் செய்வதை இந்திய ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்திய கடல் பகுதியில் மீத்தேன் எடுப்பதற்குரியஅனுமதியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்டா பல ந தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.

முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் சுகிதா நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *