April 19, 2025
புதிய தார் சாலை அமைக்கும் பணி அமைச்சர் மூர்த்தி பூஜை போட்டு துவக்கி வைத்தார்.

புதிய தார் சாலை அமைக்கும் பணி அமைச்சர் மூர்த்தி பூஜை போட்டு துவக்கி வைத்தார்.

மதுரை:

மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 73 வது வார்டு முத்துப்பட்டி அழகப்பா நகர் பிரதான சாலையில் புதிய சாலை அமைக்கும் பணி ஆனது வணிக மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் , வாஸ்து பூஜை போட்டு துவங்கி வைத்தார். இதில், மதுரை மாவட்ட ஆட்சியாளர் சங்கீதா மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் மேயர் இந்து ராணி பொன் வசந்த், துணை மேயர் நாகராஜன் மற்றும் 73 வது வார்டு கவுன்சிலர் எஸ். எஸ். போஸ் மற்றும் காங்கிரஸ் மற்றும் திமுக தொண்டர்கள் திரளானூர் கலந்து கொண்டனர்.

73 வது வார்டு கவுன்சிலர் எஸ் .எஸ். போஸ் , பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய போது: கடந்த மூன்று முறை மேற்கு தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொகுதிக்கு எந்தவித நலத்திட்டங்களையும் கொண்டு வரவில்லை எனவும் ,
இரண்டு முறை மந்திரியாக இருந்தும் இப்பொழுது எம்எல்ஏவாக இருந்தும் தொகுதி பக்கம் கூட வரவில்லை என்றும் குற்றச்சாட்டை முன்று வைத்தனர்.

தற்பொழுது வடக்கு மாவட்டம் மற்றும் மேற்கு சட்டமன்றத் தேர்தல் தொகுதியையும் சேர்த்து அமைச்சர் மூர்த்தி பொறுப்பேர் ஏற்றதிலிருந்து பல்வேறு நலத்திட்டங்கள் வார்டு மக்களுக்கு சிறப்பான முறையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இம்முறை கட்டாயமாக மேற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கைப்பற்றும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என்பது எந்தவித சந்தேகமும் இல்லை என எஸ். எஸ் .போஸ் தெரிவித்தார்.

கடந்த 30 ஆண்டுகளாக வட்டச் செயலாளராக இருந்து வரும் விஜய் சேகர் கூறுகையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எங்கள் பகுதிக்கு எந்தவிதமான நலத்திட்டங்களையும் கொண்டு வரவில்லை எனவும் , அமைச்சர் மூர்த்தி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கு தொகுதிக்கு அதிக அளவில் வந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.