
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி பேரூராட்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திமுக தேனி வடக்கு மாவட்டம் பெரியகுளம் வடக்கு ஒன்றியம் சார்பில் வடுகபட்டி பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கியும், சமபந்தி விருந்து வழங்கியும் கொண்டாடப்பட்டது.
தேனி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான தங்க தமிழ் செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார், பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எல்.எம். பாண்டியன், முன்னாள் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் முருகேசன்,வடுகபட்டி பேரூராட்சி தலைவர் நடேசன் மற்றும் வடுக பட்டி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கார்த்திக்,திமுக நிர்வாகிகள்,பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பேரூராட்சி தலைவர் நடேசன் செய்திருந்தார்.