
வடுகபட்டியில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் உத்தரவின் பேரில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் கூட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இக்குறைதீர் முகாமில் பொது விநியோகக் கடைகள் சம்பந்தமான குறைபாடுகள் குறித்தும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் கடை மாற்றம் குறித்தும் பொதுமக்கள் மனு செய்து பயனடைகின்றர்.
பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட வடுகபட்டி கடை எண் 2 ல் பெரியகுளம் வட்ட வழங்கல் அலுவலர் வளர்மதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடி தீர்வு மேற்கொண்டார்.
வட்ட வழங்கல் வருவாய் ஆய்வாளர் இசக்கி, விற்பனையாளர் உதயநிதி, வட்ட வழங்கல் அலுவலக உதவியாளர் ஜெயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.