
பாராட்டு மழையில் பழனி போலீசார்.!
பெற்றோரிடம் கோபித்து கொண்டு பழனி வந்த சிறுவன்.!
பழனி போலீசார் ரோந்து பணியின் போது சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் தனியாக நின்று கொண்டிருந்த சிறுவனை, பழனி நகர காவல் ஆய்வாளர் விஜய் விசாரித்த போது, முன்னுக்கும் பின்னும் முரணாகவும் பேசியதால் , மாணவனை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் முசிறி பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது அம்மாவுடன் சண்டை போட்டு பழனிக்கு பஸ் ஏறி வந்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து பழனி நகர காவல் துறையினர் உடனே பெற்றோருக்கு தகவல் தெரிவித்து பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் சிறுவனை ஒப்படைத்தனர். காணாமல் போன சிறுவனை மீட்டுக்கொடுத்த காவல் துறையினருக்கு பெற்றோர் நன்றி தெரிவித்தனர். சிறுவனை மீட்ட பழனி காவல்துறையினருக்கு பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள் பக்தர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பழனி நிருபர் நா.ராஜாமணி.