
பழனியில் அடிவாரம் கை வியாபாரிகள் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பாலாஜி ரவுண்டானாவில் அடிவாரம் கை வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கிரிவலப் பாதையில் பல ஆண்டுகளாக கை வியாபாரிகள் பக்தர்களிடம் வியாபாரம் செய்து வருகின்றனர்.
300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் திருக்கோயில் நிர்வாகம் மற்றும் காவல் துறையின் மூலம் கை வியாபாரிகளை கிரிவலப் பாதையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
இதனை அடுத்து 300 குடும்பங்களும் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர் தொடர்ந்து திருக்கோயில் நிர்வாகம் வறுமையில் வாடும் 300 குடும்பங்களின் நலனில் அக்கறை கொண்டு கை வியாபாரிகளை கிரிவலம் பாதையில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வின் தலைமையாக பொதினி வளவன் செந்தில்குமார் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களாக வி.சி.க வை சேர்ந்த பாவேந்தன், வாஞ்சிநாதன், ஜெயசீலன், அன்பழகன், வளவன் வாய்க்கால், ஆனந்தன், தேன்மொழி, பிரபு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முருகானந்தம், முத்துவிஜயன், சுந்தர், வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாரிக்கண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்த கோசலை, ராஜன், மக்கள் நீதி மையம் சிவஹாசன் மற்றும் அடிவாரம் கை வியாபாரிகள், பெண்கள், சமூக ஆர்வலர்கள், என திரளாக கலந்து கொண்டனர்.
பழனி தேவஸ்தான நிர்வாகமே! மாவட்ட வருவாய் துறையே!
உயர் நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் சிறு மற்றும் கை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காத்திடு.!
திருவிழா காலங்களில் இல்லாமல் ஆண்டாண்டு காலமாக அடிவாரத்தில் வருடம் தோறும் கையில் வைத்து வியாபாரம் செய்து வரும் சுமார் 300 கை வியாபாரிகளை கிரிவீதியில் வியாபாரம் செய்வதற்கு அனுமதி செய்!
என்ற விளம்பர பேனர்களை வைத்து தேவஸ்தான நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
பழனி நிருபர் : நா.ராஜாமணி.