
மதுரை மாநகராட்சி பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மேயர் இந்திராணி பொன்வசந்த் அவர்கள் உத்தரவு.
மதுரை:
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் , மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், சொத்துவரி திருத்தம் தொடர்பாக 14 மனுக்களும், சொத்துவரி பெயர் மாற்றம் வேண்டி 18 மனுக்களும், புதிய வரிவிதிப்பு வேண்டி 3 மனுக்களும், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் வரி திருத்தம் மற்றும் நீக்கம் தொடர்பாக 33 மனுக்களும், சுகாதாரம் தொடர்பாக 12 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டி 8 மனுக்களும், இதர கோரிக்கைகள் தொடர்பாக 2 மனுக்களும் என, மொத்தம் 90 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயரால், நேரடியாக பெறப்பட்டது.
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு
மேயர் உத்தரவிட்டார்.
இம்முகாமில், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, உதவி செயற் பொறியாளர் முத்து, உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.