April 19, 2025
உசிலம்பட்டியில்,தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உசிலம்பட்டியில்,தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வக்ஃபு சட்டத் திருத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை அருகே, உசிலம்பட்டியில் 100க்கும் அதிகமான த.வெ.க .நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை சமீபத்தில் மத்திய அரசு மக்களவையில் நிறைவேற்றியது, இதனைத் தொடர்ந்து,
மாநிலங்களவையிலும் இந்த வக்ஃபு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கண்டன அறிக்கையை வெளியிட்டதுடன், இன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த நிர்வாகளுக்கு உத்தரவு வழங்கினார்.

அதன்படி , தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் த.வெ.க .சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு வக்ஃபு சட்டதிருத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் மகாலிங்கம் தலைமையில் 100க்கும் அதிகமான தவெக நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் பதாதைகளை ஏந்தி, கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.