April 18, 2026
மல்லிகை செடியில் பூச்சியை நீக்கும் முறை பற்றிய விழிப்புணர்வு

மல்லிகை செடியில் பூச்சியை நீக்கும் முறை பற்றிய விழிப்புணர்வு

மல்லிகையில் பூச்சி நீக்க செயல்முறை பயிற்சி

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி கிராமத்தில் மல்லிகை செடியில் இலைப்பேன் மற்றும் அசுவினி பூச்சியை நீல ஒட்டும் பொறியைப் பயன்படுத்தி நீக்கும் முறை குறித்து மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் நான்காம் ஆண்டு கிராம தங்கல் திட்ட மாணவி ம.கிருஷ்ணவேணி ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ப்ளூ ஸ்டிக்கி ட்ராப் என்று அழைக்கப்படும் நீல ஒட்டும் பொறியைக் கொண்டு மல்லிகையில் இலைப்பேன் மற்றும் அசுவினி பூச்சியை நீக்கலாமென்றும் அதைப் பயன்படுத்தும் முறையைப் பற்றியும் விவசாயிகளுக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் செயல்முறைவிளக்கம் அளிக்கப்பட்டது.

நீல ஒட்டும் பொறிகள் பூச்சிக் கட்டுப்பாட்டுக்கான நச்சுத்தன்மையற்ற முறையாகும், இது ரசாயன பூச்சிக்கொல்லிகளை விட பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக அமைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *