April 16, 2025
சர்வதேச குழந்தைகள் புத்தக தினத்தை முன்னிட்டு வாசிப்பு போட்டி.

சர்வதேச குழந்தைகள் புத்தக தினத்தை முன்னிட்டு வாசிப்பு போட்டி.

கந்தர்வக்கோட்டை ஏப் 03

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சர்வதேச குழந்தைகள் புத்தக தினத்தை முன்னிட்டு வாசிப்பு போட்டி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார்.

நிகழ்வினை தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும் , பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா ஒருங்கிணைத்தார்.

ஆறாம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்ட வாசிப்பு போட்டியில் மாணவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரிசையில் புலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், சின்ன மருது, பெரிய மருது உள்ளிட்ட நூல்களும், உதயசங்கர் எழுதிய மாயக்கண்ணாடி, விஞ்ஞானி வாழ்வினிலே என்ற தலைப்பில் சுப்பிரமணியம் சந்திரசேகர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், கலிலியோ கலிலி, தாமஸ் ஆல்வா எடிசன், எம் எஸ் சுவாமிநாதன், தும்பிக்கை வந்தது எப்படி, பாரதியார் கவிதைகள், வண்ணத்துப்பூச்சி சொன்ன கதை, குரல் கொடுக்கும் வானம்பாடி, உலகம் போற்றும் மேதைகள், அறிவியல் பாடல்கள், தரங்கம்பாடி தங்க புதையல், தமிழ் நாவல் உலகின் தந்தை மாயூரம் வேதநாயகம் பிள்ளை, வேடிக்கை விடுகதைகள், சிந்திப்போம், அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட நூல்களை மாணவ மாணவிகள் போட்டி போட்டு வாசித்தனர். விரைவில் புத்தகத்தை வாசித்து முடிக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.