
பங்குனி பெருந் திருவிழா
இராஜபாளையம் அருகே கொம்மந்தாபுரம் இந்து நாடார் உறவினருக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் கொம்ந்தாபுரம் பகுதியில் உள்ள இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் பூக்குழி திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
இந்தக் கோவிலில், கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக இது வழக்கத்தில் உள்ளது 50 ஆண்டுகளுக்கு பின்பு புதிதாக கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு தற்போது பங்குனி திரு விழாவிற்கு கெடியேற்றப்பட்டுள்ளது இந்த பூக்குழி திருவிழாவை காண்பதற்கு இராஜபாளையம் சேத்தூர் முகவூர் ப உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்வர்கள்.
இந்த பூக்குழி திருவிழா ஏற்பாடுகளை ஊர் நாட்டாமை ராஜபாண்டி தலைவர் செல்லத்துரை உபதலைவர் ராஜ்குமார் மற்றும் ஒரு பொதுமக்கள் சார்பில் செய்யப்பட்டுள்ளன.