
ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை தெற்கு பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது
ஸ்ரீமுஷ்ணம் மார்ச் : 29
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாளையங்கோட்டை மேல்பாதி தெற்கு பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளியின் ஆண்டு விழா ஸ்ரீமுஷ்ணம் வட்டார கல்வி அலுவலர் சா.இந்திரா தலைமையில் நடைபெற்றது பட்டதாரி ஆசிரியர் வாசுதேவன் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் குழந்தைவேலு பள்ளி மேலாண்மை குழு தலைவர் மேகலா மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் புருஷோத்தமன் வைத்தியநாதசாமி வினிதா முருகன் ஆகியோர் முன்னிலை வகித்து பரிசளித்து பாராட்டுரை வழங்கினர்.
ஸ்ரீமுஷ்ணம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்முருகன் வீரங்கன் சோழதரம் காவல்துறை உதவி ஆய்வாளர் சையத்அப்சல் பாளையங்கோட்டை உதவி மின் பொறியாளர் வேல்முருகன் ஸ்ரீமுஷ்ணம் உதவி பொறியாளர் அனுஷாதேவி பாளையங்கோட்டை மேல்பாதி கிராம நிர்வாக அலுவலர் மதன் ஸ்ரீமுஷ்ணம் வட்டார மேற்பார்வையாளர் குணசேகரன் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ரவிகாந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) மலைமாறன் அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார் அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் வாசுதேவன் பட்டதாரி ஆசிரியர் தொகுத்தளிக்க இரு பால் ஆசிரிய பெருமக்கள் பால் சேவியர் கற்பகம் ஜூலிகிளாரா வீரபுத்திரன் பீட்டர் ஆனந்தராஜ் அன்புக்கணிவனிதா அன்பரசி விஜயலட்சுமி ரமேஷ் செல்வகுமாரி பிரியதர்ஷினி ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து பரிசளித்தனர் மேலும் ஆண்டு விழாவில் மாணவ மாணவிகள் நடனம் பரதநாட்டியம் திருக்குறள் ஆங்கில பேச்சு நாட்டுப்புற பாடல் என நிகழ்ச்சிகள் செய்து அசத்தினர்.
சத்துணவு மைய பொறுப்பாளர் மற்றும் பணியாளர்கள் காலை உணவு திட்ட பொறுப்பாளர் மற்றும் பணியாளர்கள் அங்கன்வாடி மைய பொறுப்பாளர் மற்றும் பணியாளர்கள் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முன்னாள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஊர்பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆண்டு விழா சிறப்பாக நடைபெற அத்தனை உதவிகளையும் செய்து சிறப்பு செய்தனர் இறுதியாக ஆசிரியர் பீட்டர் ஆனந்தராஜ் நன்றியுரை கூறினார்