
மார்ச் 19மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சி கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ் பாண்டி பட்டதாரியான இவர் மாடுபிடி வீரராகவும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஜல்லிக்கட்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் மேலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு பிடிக்கும்போது காளை முட்டியதில்பரிதாபமாக உயிரிழந்தார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மகேஷ் பாண்டியின் குடும்பத்தினர் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர் இதனை அடுத்து தமிழக முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார் விரைவில் இந்த நிதி உதவியானது மகேஷ் பாண்டியன் குடும்பத்தினரிடம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மார்ச் 19
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சி கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ் பாண்டி பட்டதாரியான இவர் மாடுபிடி வீரராகவும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஜல்லிக்கட்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் மேலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு பிடிக்கும்போது காளை முட்டியதில்பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் மகேஷ் பாண்டியின் குடும்பத்தினர் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனை அடுத்து தமிழக முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார் விரைவில் இந்த நிதி உதவியானது மகேஷ் பாண்டியன் குடும்பத்தினரிடம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.