
6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தில் கைது.
சுரண்டை அருகே 1-ஆம் வகுப்பு பயிலும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் செல்வம் என்ற மாணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு பாளை சிறையில் அடைப்பு.தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஏந்தலூர் கிராமத்தில் நடுத்தெருவில் வசிக்கும் சந்திரன் மகன் செல்வம் (19) தனியார் கல்லூரியில் இராண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்றைய முன்தினம் அதே ஊரில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்த அடிப்படையில் ஊத்துமலை காவல் ஆய்வாளர் வனசுந்தர் வீ. கே. புதூர் காவல் உதவி ஆய்வாளர் பவுல் மற்றும் காவலர்கள்,சமூக நல குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளும் சிறுமியிடம் விசாரணை செய்தனர்.இதையடுத்து சிறுமியின் பெற்றோர் புகார் கொடுக்க முன்வராத நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு செல்வம் திருநெல்வேலி-பாளை மத்தியசிறையில் அடைத்தனர்.
மேலும் சிறுமி பாலியல் தொல்லையால் பாதிக்கபட்டு இருப்பதை தெரிந்தும் பெற்றோர் புகார் கொடுக்க முன்வரவில்லை எனவும் மாவட்ட நிர்வாகம். கிராமங்களில் உள்ள பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.