April 19, 2025
மன்னாடிமங்கலத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகும் அவலம்

மன்னாடிமங்கலத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகும் அவலம்

சோழவந்தான், மார்ச் :9.

சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலத்தில் நடுரோட்டில் ஆறாக ஓடும் குடிநீர் சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளம் மற்றும் முகூர்த்த நாளான இன்றுஅதிக வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் அருகில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அதிக அளவு மணல் அள்ளிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே , குருவித்துறை மெயின் ரோட்டில் குருபகவான் கோவில் செல்லும் சாலை மன்னாடி மங்கலத்தில் இருந்து செல்லம்பட்டி ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் தேவைக்காக குழாய் ஒன்று செல்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த குழாயில் ஆங்காங்கே பாதிப்புகள் ஏற்பட்டு உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து, இப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. மாறாக கடந்த இரண்டு நாட்களாக நடுரோட்டில் திடீரென பெரிய அளவில் குழாய் உடைந்து ஊற்று போல் உருவாகி ரோடு முழுவதும் பல லட்சம் லிட்டர் குடிநீர்ஆறு போல் ஓடுகிறது. மேலும் சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலை ஓரத்தில் பள்ளங்கள் தோண்டப்பட்டு இருக்கிறது .

இரவில் மின் விளக்கும் சரிவர இல்லை அருகிலுள்ள குருவித்துறை ஊராட்சி சித்தாந்திபுரம் பகுதியில் மணல் அள்ளிச் செல்லும் அதிகளவு வாகனங்களால் இரவு நேரங்களில் சாலையின் கீழ் பகுதியில் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுகிறது. இதனால், நேற்று இரவு சில வண்டிகள் கீழே விழுந்ததில் வாகன ஓட்டிகளுக்கு காயம் ஏற்பட்டதாக கூறுகின்றனர் .

இந்தப் பகுதிகளில், நடைபெறும். சாலை விரிவாக்க பணியும் மந்த கதியில் நடக்கிறது இது குறித்து பொதுமக்கள் புகார் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.

சாலை விரிவாக்க பணியை துரிதப்படுத்த வேண்டும் சித்தாதிபுரம் பகுதிகளில் இருந்து மணல் அள்ளிச் செல்லும் வாகனங்களை வேறு பகுதியில் மாற்றிவிட வேண்டும் கோடை காலம் துவங்கி விட்ட நிலையில் குடிநீருக்காக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகும் சூழ்நிலை இருப்பதால் குடிநீர் குழாய்களில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்து குடிநீர் வீணாகாமல் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.