
நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
சென்னை: திரைப்படத்துக்காக பேரன் துஷ்யந்தின் நிறுவனம் வாங்கிய கடனுக்காக, நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்தின் நிறுவனம் ஜகஜால கில்லாடி என்ற திரைப்படத்துக்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாதது தொடர்பான வழக்கில் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.






